பிறப்பு பதிவு
பிறப்புச் சான்றிதழின் பிரதியினைபெற்றுக்கொள்ளல்.
- பிறப்புச் சான்றிதழின் பிரதியினைபெற்றுக்கொள்ள முடிவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலகத்தில் ஆகும்.
- தேவையான விண்ணப்பப்படிவம் எந்தவொரு பிரதேச செயலக்தின் மாவட்ட பதிவக பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
- அறவிடப்படும் கட்டணங்கள்,
- பிறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட திகதி தெரியுமாயின் ரூபா.100.00
- பிறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட திகதி தெரியாவிடின்,
- 03 மாதங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 100.00
- 02 வருடங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 200.00
- தேவையான கட்டணங்கள் முத்திரை மூலம் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டவும்.
- பூரணப்படித்தப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும்.
- பிறப்புச் சான்றிதழினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் விலாசம் எழுதிய முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையினை விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்கவும்.
- பிறப்பு பதியப்பட்டிருந்தால், பிறப்புச் சான்றிதழின் பிரதி அனுப்பப்படுவதுடன் பிறப்பு பதியப்படாதிருந்தால் அது பற்றி தெரிவித்து கடிதம் அனுப்பப்படும்.
பிறப்புச்சான்றிதழை மொழிமாற்றம் செய்தல்
படிப்படியான வழிமுறைகள்:
படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பெறுதல் (மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் விண்ணப்பம்)
படி 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து தலைமை பதிவாளர் திணைக்களத்திலுள்ள தலைமை கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
படி 3: அதிகார பூர்வ மொழிப்பெயர்ப்பாளருக்கு ஆவணங்களை அனுப்புதல்
படி 4: மொழிபெயர்ப்புக்கான செயல்பாடு நடப்பதற்கு கிட்டதட்ட 3 நாட்களாகும்.
படி 5: மொழிப்பெயர்ப்பை அஞ்சல் மூலமாகவோ அல்லது அந்த நபரிடம் நேரடியாகவோ விண்ணப்பதாரருக்கு வழங்குதல்.
தகுதி:
உண்மையான பிறப்புச்சான்றிதழ் பிரதிகளை மாற்றியமைக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த சேவையை பெற தகுதியானவர்களாவர்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
அனைத்து விண்ணப்பங்களும் தலைமைப்பதிவாளர் காரியாலத்தின் கரும்பீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பபடிவம்:
விண்ணப்பபடிவம் பிறப்புச்சான்றிதழ் மொழி பெயர்ப்புக்குரிய விண்ணப்பம்.
காலக்கேடு:
செயல்முறை காலக்கோடு: 3 நாட்கள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கேடு:
வேலை நாட்கள் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
திறந்திருக்கும் நேரம் - மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை
விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்:
- விண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம்: விண்ணப்பங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்குதல்.
- கட்டணம்: ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு மொழிக்கு ருபா 70.00
- அபராதம்: அபராதங்கள் எதுவும் உள்ளடங்கவில்லை.
- இதரக்கட்டணம்: இதரக்கட்டணங்கள் எதுவும் இல்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
உண்மையான மொழிபெயர்க்கப்பட வேண்டிய பிறப்புச்சான்றிதழ்.
சேவைக்கான பொறுப்புக் குழு:
மொழிப்பெயர்ப்பாளர்
சிறப்பு வரையறைகள்:
இந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.
பிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்
- பிறப்பு பதிவு செய்தல் குறிப்பு,
- 01 வது கூட்டின் விபரம் (பிறந்த திகதி மற்றும் பிறந்த இடம்)
- 03 வது கூட்டின் விபரம் (பால்)
- 05 வது கூட்டின் விபரம் (தாயின் விபரங்கள் அனைத்தும்)(பிறப்பினை பதிவுசெய்ததன் பின் தாயின் பெயர் மாற்றப்பட்டிருந்தால், பெயர் மாற்றம் இந்த ஒதுக்கீட்டின் கீழ்செய்ய முடியாது)
- 09 வது கூட்டின் விபரம் (தகவல் அளிப்பவரது விபரங்கள்) திருத்தப்பட முடியும்.
- பிரதிக்கினை பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
- பிரதிக்கினையினை சமர்ப்பிப்பது
- பிறப்புச்சான்றிதழுக்குரிய நபர்
- தந்தை அல்லது தாய்
- சட்டமுறையான பாதுகாவலர்
- பிறப்புச் சான்றிதழில் உள்ள ஏதாவது விபரம் பற்றி அதிருப்தியடைந்த நபர்
- பிரதிக்கினைக்கு வழங்கப்பட வேண்டிய முத்திரைக்கட்டணம் 5.00 ஆகும்.
- பிரதிக்கனை திருத்த உத்தேசித்த பிறப்புச்சான்றிதழின் உறுதிப்படித்தப்பட்ட பிரதியினை கட்டாயம் இணைத்தல் வேண்டும். விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்காக எழுத்து மூல சாட்சியங்ளை சமர்ப்பிக்க.
- பிரதிக்கனை மூலம் செய்யப்படும் விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்கான எழுத்து மூல சாட்சியங்கள் சில கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.,
- பெற்றோரின் விவாகச் சான்றிதழ்
- பிள்ளை பெயர்ப்பட்டியல்/ சகோதர பெயர்ப்பட்டியல்
- தந்தை/ தாயின் பிறப்புச்சான்றிதழ்
- பெற்றோரின் விவாகத்தினை பதிவுசெய்ததன் பின் பிறந்த பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ்
- விவாகத்தினை பதிவு செய்ததன் பின் பிறந்த பிள்ளை அல்லாவிடில், விடயத்திற்குரிய பிள்ளைக்கு மூத்த அல்லது இளைய பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ்
- வைத்தியசாலை, மகபேற்று இல்லம் என்பவற்றில் உள்ள குறிப்புகளின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி அல்லது மகபேற்று தாதியின் ஆவணத்தின் பிரதி.
- மாணவர் அறிக்கை, பிள்ளையினை பாடசாலையில் அனுமதித்தல் ஆவணத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
- விடயதாரி மற்றும் பெற்றோரின் பெயரினை உள்ளடக்கிய வாக்காளர் பெயர் பட்டியல்
- தந்தை இறந்திருந்தால் அவரின் இறப்புச்சான்றிதழ்
மகவேற்பு செய்தல்
- மகவேற்பு செய்யப்படும் பிள்ளையின் வயது 14 ற்கு அதிகமாதல் கூடாது.
- விண்ணப்பதாரர் மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள்
- விண்ணப்பதாரரது வயது 25ற்கு அதிகமாயிருத்தல் வேண்டும்.
- பிள்ளையினை மகவேற்பு செய்வதற்கு விண்ணப்பதாரர் மற்றும் உரிய பிள்ளைக்கிடையில் வயது வித்தியாசம் குறைந்தது 21 வயதாவது இருத்தல் வேண்டும்.
- உரிய பிள்ளை விண்ணப்பதாரரின் பாதுகாவலில் இருந்தால் விண்ணப்பதாரரின் சகோதரரின் அல்லது சகோதரியின் அல்லது அவர்களின் பாதுகாப்பில் உள்ள பிள்ளையாயின் அல்லது அவர்களின் விவாக திறத்தாரின் பிள்ளையாயின் மேற்குறிப்பிட்ட நிலைமை உரியதல்ல.
- மகவேற்பு செய்யப்படும் பிள்ளையின் வயது 10ஐ விட அதிகமாயின் பிள்ளையின் விருப்பம் அவசியமானது.
- விவாக திறத்தாரின் மூலம் (கணவன் மற்றும் மனைவி) விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட முடியும்.
- மகவேற்பு கட்டளையினை வழங்குவது மாவட்ட நீதிமன்றத்தினால் ஆகும்.
- அக்கட்டளை பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் பதிவு செய்யப்படல் வேண்டும்.
- மகவேற்பு செய்யப்படும் பிள்ளையின் பிறப்பினை மீள பதிவு செய்துக்கொள்ள முடியும்.
- பிறப்பினை மீள பதிவு செய்துக்கொள்ள கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- பிறப்பினை மீள பதிவுசெய்துக்கொள்வதற்கான விண்ணப்பம்
- மகவேற்பு செய்த பெற்றோரின் விவாகச் சான்றிதழ்
- தாய் மற்றும் தந்தையின் விவாகச் சான்றிதழ்
- மகவேற்புச் சான்றிதழ்
- பிறப்பினை மீள பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பத்தினை பிள்ளையின் பிறந்த இடத்திற்குரிய பிரதேசத்திற்குரிய பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வலய அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்
பொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- பிறப்பினை பதிவு செய்வதற்காக பிறப்பு நிகழ்ந்த பொது வைத்திய சாலையில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவுசெய்யும் பதிவாளருக்கு அறிவிக்கவும்.
- பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
- தந்தை
- தாய்
- பிள்ளை பிறந்த நேரம் அங்கு இருந்த நபர்
- வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
- பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக் கொள்ளவும்.
- சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
- சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை..
- பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.
- 03 மாத கால எல்லைக்குள் பிறப்பினை இலவசமாக பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
- தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
- மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்
கிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- பிறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். பிறப்பு நிகழ்ந்தது கிராமிய வைத்திய சாலையிலாயின், அப்பிரதேசத்தில் உள்ள பதிவாளருக்கு பிறப்பினை பதிவுசெய்வதற்கு அறிவிக்கவும்.
- பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
- தந்தை
- தாய்
- பிள்ளை பிறந்த நேரம் அங்கு இருந்த நபர்
- வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
- பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.
- சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
- சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை.
- பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.
- பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
- தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
- மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்
தனியார் வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்.
- பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளரால் பிறப்பு பதிவுசெய்யப்படுகிறது.
- பிறப்பு தனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்தால் அத்தகையை பிறப்பை அப்பிரதேச பதியவாளருக்கு அறிவித்தல்.
- பிறப்பைப் பற்றிய தகவல்களை வழங்க பொருத்தமான நபர்கள்
- தந்தை
- தாய்
- பிறப்பு நிகழ்ந்தபோது சமூகமளித்திருந்த நபர்
- அந்த வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி
- பிறப்பை அறிவிப்பதற்காக பிறப்பு, இறப்பு பதிவாளரிடமிருந்து தகுந்த வெளிப்படுத்தல் படிவத்தைப் பெற்றுக்கொள்ளுதல்.
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- சரியாகப் பூர்த்திசெய்யப்பட்ட வெளிப்படுத்தல்.
- பிறப்பு நிகழ்ந்தததை நிரூபிப்பதற்கு வைத்தியசாலையிலிருந்து வழங்கப்பட்ட ஆவணம்.
- பிறப்பு நிகழ்ந்து 3 மாதங்களுக்குள் பிறப்பை இலவசமாகப் பதிவுசெய்துகொள்ள முடியும்.
- பிறப்புச் சான்றிதழ் பிரதியொன்று தகவல் அளிப்பவருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
- மேலதிக தகவல்களுக்கு உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளரைச் சந்திக்கவும்
வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்.
- பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம அதிகாரிக்கு அறிவிக்கவும்.
- கிராம அதிகாரியினால் பிறப்பு பற்றிய அறிக்கை பிரதேச பதிவாளருக்கு அறிவிக்கப்படும்.
- பிறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும்.
- சரியாக பூரணப்படித்தப்பட்ட பிரதிக்கினை பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு பெற்று தரவும். பிரதிக்கினை பதிவாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
- தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
- தந்தை
- தாய்
- பிறப்பு நிகழ்ந்த பொழுது அருகில் இருந்த நபர்
- பாதுகாவலர்
- பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும். பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்கு பின் பிறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடிவதுடன் அதற்காக காலங்கடந்த பிறப்பினை பதிவு செய்தல் விபரத்தினை பார்க்க.
- தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
காலங்கடந்த பிறப்பினை பதிவு செய்தல்.
- பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்கள் பிறப்பை பதிவுசெய்யாமலிருந்தால் அதை பதிவுசெய்யலாம்.
- பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளருக்கு வெளிப்படுத்தலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- இதற்குத் தகுதியானவர்கள்
- இதில் ஆர்வம்காட்டுகின்ற எவரேனும் ஒருவர்
- பெற்றோர்களில் ஒருவர்.
- அறவிடப்படும் கட்டணம் ரூ.50.00
- பிறப்பு நிகழ்ந்ததிலிருந்துஒரு வருடத்திற்கு வெளிப்படுத்தலுடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- பெற்றோர் விவாகம் செய்திருந்தால் விவாக சான்றிதழ்
- பிறந்த இடத்தையும் திகதியையும் நிரூபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் ஒன்று
- வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- கிராம உத்தியோகத்தர் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- பொது சுகாதார அதிகாரியின் சான்றிதழ்
- பிறப்பு நிகழ்ந்து ஒரு வருடத்தின் பின்னர் வெளிப்படுத்தலுடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- பெற்றோர் விவாகம் செய்திருந்தால் விவாக சான்றிதழ்
- வெற்று பெறுபேற்று தாள்
- பிறந்த இடத்தையும் திகதியையும் நிரூபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் ஒன்று
- வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- கிராம உத்தியோகத்தர் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- சுகாதார மருத்துவ தாதியின் பிறப்பு பதிவேட்டின் பிரதி
- மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் எதுவும் இல்லாத சந்தர்ப்பங்களில்,
- சுகாதார அபிவிருத்தி பதிவேடு
- ஞானஸ்னான சான்றிதழ்
- பாடசாலை அனுமதி பதிவேட்டின்/மாணவர் அறிக்கையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- தோட்ட நலனோம்பல் அதிகாரியின் அறிக்கை
- பிறப்பு நிகழ்ந்த திகதியை ஒட்டி நேரம் கணிக்கப்பட்ட ஜாதக பதிவின் பிரதி
- இந்த ஆவணங்களில் எதுவும் இல்லாவிட்டால், அறிந்த விடயங்களை வெளிப்படுத்தும் ஒரு சத்திய கடதாசி.
பதிவுசெய்யப்பட்ட தோட்டத்தில் நிகழந்த பிறப்பை பதிவு செய்தல்
- பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் தோட்ட அதிகாரிக்கு அறிவித்தல்
- தகவல் அளிக்க வேண்டிய நபர்கள்
- தந்தை
- தாய்
- பிறப்பின்போது சமூகமளித்திருந்த ஒரு நபர்
- தோட்ட அதிகாரி விண்ணப்பத்தை சான்றுப்படுத்தி மாவட்ட மருத்துவ அதிகாரி ஊடாக பிரதேச செயலாளர் ஊடாக அனுப்பிவைப்பார்.
- மாவட்ட பதிவாளரால் பிறப்பு பதிவுசெய்யப்பட்டு பிறப்புச் சான்றிதழ் தோட்ட அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
- தகவல் அளித்தவர் தோட்ட அதிகாரியிடமிருந்து பிறப்புச் சான்றிதழை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்
வெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- நிரந்தர இலங்கை பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளின் பிறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
- பிறப்பினை பதிவுசெய்வது பிறப்பு நிகழ்ந்த நாட்டில் உள்ள நிரந்தர இலங்கை தூதுவர்/ நிரந்தர இலங்கை உயர் ஆணையகத்தில் ஆகும்.
- பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
- தந்தை
- தாய்
- பிள்ளையின் பாதுகாவலர்
- பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை நிரந்தர இலங்கை தூதுவர் / நிரந்தர இலங்கை உயர் ஆணையகத்தில் பெற்றுக்கொள்ளவும்.
- சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
- சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை
- பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு உரிய ஆவணங்கள்
- 03 மாத கால எல்லைக்குள் பிறப்பினை இலவசமாக பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
- தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
- வெளிநாட்டில் பிறப்பு நிகழ்ந்து, பிறப்பு பதிவுசெய்யப்படாத தற்பொழுது நிரந்தரமாக இலங்கைக்கு வந்திருக்கும் நபரின் பிறப்பினை பதிவு செய்துக்கொள்ள முடியும்.
அதற்காக தேவையான தகவல்கள் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மத்திய பதிவேட்டறையின் உதவி பதிவாளர் நாயகம் அவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் தொலைலபேசி இலக்கம்: +94 112 329 773 or +94 112 433 075
விவாகப் பதிவு
விவாகம் (பொது) பதிவு செய்தல்
- திறத்தார் இருவரும் முஸ்லிம்கள் அல்லாத விடத்து ஏனைய அனைவருக்கும் விவாகம் (பொது) பதிவு செய்தல் கட்ளைச் சட்டத்தின் கீழ் விவாகம் செய்ய முடியும்.
- விவாக அறிவித்தல் பிரதிகள் இரண்டில் எழுதி உறுதிப்படுத்தி பிரிவின் விவாக பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
- அறிவித்திலினை உறுதிப்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள்;
- பிரிவின் விவாகப் பதிவாளர்கள்
- சமாதான நீதவான்
- பிரதேசத்தின் நொத்தாரிசுமார்
- மதகுருவானவர்
- விவாக அறிவித்தலினை சமர்ப்பிப்பதற்காக பூரணப்படுத்தப்பட வேண்டிய தேவைகள்
- திறத்தார் உரிய பிரிவில் வதிவு சம்பந்தமான தேவையினை பூர்த்தி செய்தல்
- விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் பிரிவில் வசித்தல்.
- விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் ஓரே பிரிவில் அல்லாது வெவ்வேறு பிரிவில் வசித்தல்.
- திறத்தாரில் ஒருவர் விவாக அறிவித்தல் கொடுக்கு முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கைக்குள் வதியாது மற்றைய திறத்தார் 10 நாட்கள் இலங்கையில் வசித்தல்.
- இருவரில் ஒருவராவது விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கையில் வதியாது, ஒரு திறத்தார் 04 நாட்கள் இலங்கையில் வசித்தல்.
- திறத்தார் இருவரும் முந்திய பிறந்த தினத்தில் 18 வயதினை பூர்த்தி செய்திருத்தல்.
- அவர்கள் திருமணம் புரிவதற்கு தடை செய்யப்பட்ட உறவினை கொண்டிருக்கவில்லை என்பது,
- அச்சமயம் செல்லுப்படியாகும் விவாகத்தினை கொண்டிருக்கவில்லை என்பது.
- திறத்தார் உரிய பிரிவில் வதிவு சம்பந்தமான தேவையினை பூர்த்தி செய்தல்
- விவாகம் (பொது) பதிவு செய்வதற்காக அறிவித்தல் கொடுத்து 14 நாட்கள் செல்லுப்படியாக வேண்டும். அவ்வாறு 14 நாட்கள் கழியும் முன் விவாகம் (பொது) பதிவு செய்வதற்கு இயலும்.
- அலுவலகத்திற்கு வெளியில் விவாகத்தினை பதிவு செய்வதற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- விவாகத்தினை பதிவு செய்யும் போது பதிவாளருக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள்.
| இல | கடமை | யாருக்கு செலுத்துவது | யார் செலுத்துவது | தொகை | கொடுப்பனவு வகை | |
| 1 | பதிவாளர் அலுவலகத்தில் அல்லது வேறு இடத்தில் விவாகம் செய்துகொள்வதை அறிவித்தல் | பதிவாளர் | விண்ணப்பதாரர் | 100.00 | காசு | |
| 2 | மேலதிக பதிவாளர் அலுவலகத்தில் அல்லது வேறு இடத்தில் விவாகம் செய்துகொள்வதை அறிவித்தல் | மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் | விண்ணப்பதாரர் | 100.00 | காசு | |
| 3 | அறிவிக்கப்பட்ட திருமணத்திற்கு பதிவாளரின் சான்றிதழை வழங்குதல் | பதிவாளர் | திருமண தரப்பினர் | 100.00 | காசு | |
| 4 | அறிவிக்கப்பட்ட திருமணத்திற்கு பதிவாளரின் சான்றிதழை வழங்குதல் | மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் | திருமண தரப்பினர் | 100.00 | காசு | |
| 5 | பதிவாளர் அலுவலகத்தில் மணச்சடங்கு நிறைவேற்றல் | பதிவாளர் | திருமண தரப்பினர் | 750.00 | காசு | |
| 6 | மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் அல்லது மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மணச்சடங்கு நிறைவேற்றல் | மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் | திருமண தரப்பினர் | 750.00 | காசு | |
| 7 | (1) அல்லது 38(2) பிரிவின் கீழ் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியில் மணச்சடங்கு நிறைவேற்றல் | பதிவாளர் |
|
750.00 | காசு | |
| --- | --- | --- | காசு | |||
| 8 | 38(1) அல்லது 38(2) பிரிவின் கீழ் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியில் மணச்சடங்கு நிறைவேற்றல் | மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் | அரசாங்கம் | 750.00 | காசு | |
| 9 | 27(3)ஆம் பிரிவின் கீழ் விசேட அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளுதல் | அரசாங்கம் | திருமண தரப்பினர் | 100.00 | காசு | |
| 10 | பதிவுசெய்யப்பட்ட பொது வணக்கஸ்தலத்தில் மணச்சடங்கு நிறைவேற்றல் | மாவட்ட பதிவாளர் | திருமண தரப்பினர் | 750.00 | காசு |
விவாக சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்
- விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ள முடிவது விவாகம் நிகழ்ந்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலகத்தில் ஆகும்.
- தேவையான விண்ணப்பப்படிவம் எந்தவொரு பிரதேச செயலக்தின் மாவட்ட பதிவக பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
- அறவிடப்படும் கட்டணங்கள்
- விவாகச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பிரிவு மற்றும் பதிவு திகதி தெரியுமாயின் ரூபா.25.00
- பதிவு செய்யப்பட்ட பிரிவு தெரியுமாயின் மற்றும் விவாகச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுத்திகதி தெரியாவிடின்
- 03 மாதங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 50.00
- 02 வருடங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 100.00
- தேவையான கட்டணங்கள் முத்திரை மூலம் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டவும்.
- பூரணப்படித்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களைளை உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும்.
- விவாகச் சான்றிதழினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் விலாசம் எழுதிய முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையினை விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்கவும்.
விவாக சான்றிதழை மொழிமாற்றம் செய்தல்.
படிப்படியான வழிமுறைகள்:
- படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பெறுதல் (மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் விண்ணப்பம்)
- படி 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து தலைமை பதிவாளர் திணைக்களத்திலுள்ள தலைமை கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- படி 3: அதிகார பூர்வ மொழிப்பெயர்ப்பாளருக்கு ஆவணங்களை அனுப்புதல்.
- படி 4: மொழிபெயர்ப்புக்கான செயல்பாடு நடப்பதற்கு கிட்டதட்ட 3 நாட்களாகும்.
- படி 5: மொழிப்பெயர்ப்பை அஞ்சல் மூலமாகவோ அல்லது அந்த நபரிடம் நேரடியாகவோ விண்ணப்பதாரருக்கு வழங்குதல்.
தகுதி:
உண்மையான விவாக சான்றிதழ் பிரதிகளை மாற்றியமைக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த சேவையை பெற தகுதியானவர்களாவர்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
அனைத்து விண்ணப்பங்களும் தலைமைப்பதிவாளர் காரியாலத்தின் கரும்பீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பபடிவம்:
விண்ணப்பபடிவம் விவாக சான்றிதழ் மொழி பெயர்ப்புக்குரிய விண்ணப்பம்.
காலக்கேடு:
- செயல்முறை காலக்கோடு: 3 நாட்கள்
- சமர்ப்பிக்க வேண்டிய காலக்கேடு:
- வேலை நாட்கள் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
- திறந்திருக்கும் நேரம் - மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை
- விடுமுறை நாட்கள் -அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
- ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்:
- விண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம்: விண்ணப்பங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்குதல்.
- கட்டணம்: ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு மொழிக்கு ருபா 70.00
- அபராதம்: அபராதங்கள் எதுவும் உள்ளடங்கவில்லை.
- இதரக்கட்டணம்: இதரக்கட்டணங்கள் எதுவும் இல்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
உண்மையான மொழிபெயர்க்கப்பட வேண்டிய விவாக சான்றிதழ்
சேவைக்கான பொறுப்புக் குழு:
மொழிப்பெயர்ப்பாளர்
சிறப்பு வரையறைகள்:
இந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.
மதகுருவானவரினால் நடாத்தப்படும் விவாகம்
- கிருஸ்தவர்களின் விவாகம் தேவஸ்தானங்களுக்குள் நடாத்த வழி வகுக்கப்பட்டுள்ளது.
- விவாக அறிவித்தல் இரு பிரதிகளில் எழுதி உறுதிப்படுத்தி பிரிவின் விவாக பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
- அறிவித்திலினை உறுதிப்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள்
- பிரிவின் விவாகப் பதிவாளர்கள்
- சமாதான நீதவான்
- பிரதேசத்தின் நொத்தாரிசுமார்
- மதகுருவானவர்
- விவாக அறிவித்தலினை சமர்ப்பிப்பதற்காக பூரணப்படுத்தப்பட வேண்டிய தேவைகள்
- திறத்தார் உரிய பிரிவில் வதிவு சம்பந்தமான தேவையினை பூர்த்தி செய்தல்
- விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் பிரிவில் வசித்தல்.
- விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் ஓரே பிரிவில் அல்லாது வெவ்வேறு பிரிவில் வசித்தல்.
- திறத்தாரில் ஒருவர் விவாக அறிவித்தல் கொடுக்கு முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கைக்குள் வதியாது மற்றைய திறத்தார் 10 நாட்கள் இலங்கையில் வசித்தல்.
- இருவரில் ஒருவராவது விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கையில் வதியாது, ஒரு திறத்தார் 04 நாட்கள் இலங்கையில் வசித்தல்.
- திறத்தார் இருவரும் முந்திய பிறந்த தினத்தில் 18 வயதினை பூர்த்தி செய்திருத்தல்.
- அவர்கள் விவாகம் புரிவதற்கு தடை செய்யப்பட்ட உறவினை கொண்டிருக்கவில்லை என்பது
- அச்சமயம் செல்லுப்படியாகும் விவாகத்தினை கொண்டிருக்கவில்லை என்பது
- திறத்தார் உரிய பிரிவில் வதிவு சம்பந்தமான தேவையினை பூர்த்தி செய்தல்
- பதிவாளர் அல்லது மேலதிக மாவட்ட பதிவாளரிடம் “பதிவாளரின் சான்றிதழ்” இனை பெற்றுக் கொள்ளவும்.
- அவ் பதிவாளரின் சான்றிதழ் விவாகம் நிறைவேற்றப்படும் தேவஸ்தானத்தின் மதகுருவிடம் ஒப்படைக்குக. அத்துடன் இரத்துச்செய்யப்படாத ரூபா 25.0 பெறுமதியான முத்திரையினை வழங்குக
இறப்பு பதிவு
இறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்
- இறப்புச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ள முடிவது இறப்பு நிகழ்ந்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலகத்தில் ஆகும்.
- தேவையான விண்ணப்பப் படிவம் ஏதாவது ஒரு பிரதேச செயலக்தின் மாவட்ட பதிவக பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
- அறவிடப்படும் கட்டணங்கள்,
- இறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட திகதி தெரியுமாயின் ரூபா.25.00
- இறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட திகதி தெரியாவிடின்,
- 03 மாதங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 50.00
- 02 வருடங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 100.00
- தேவையான கட்டணங்கள் முத்திரை மூலம் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டவும்.
- பூரணப்படித்தப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும்.
- இறப்புச் சான்றிதழினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் விலாசம் எழுதிய முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையினை விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்கவும்.
- இறப்பு பதியப்பட்டிருந்தால், இறப்புச் சான்றிதழி அனுப்பப்படிவதுடன் இறப்பு பதியப்படாதிருந்தால் அது பற்றி தெரிவித்து கடிதம் அனுப்பப்படும்
இறப்புச்சான்றிதழில் உட்பு குத்தப்பட்ட விபரங்களை திருத்தியமைத்தல்
- பிரதிக்கினையினை இறப்பு நிகழ்ந்த இடத்தின் பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
- பிரதிக்கினையினை சமர்ப்பிப்பது கீழ் காணப்படும் நபர்களில் ஒருவரினால் ஆகும்.
- சம்பவத்தினை பதிவு செய்வதற்காக தகவல் அளித்த நபர்
- காரணம் பற்றிய உண்மையினை தெரிந்த நம்பிக்கையான நபர்
- இறப்புச்சான்றிதழில் பதிவுசெய்யப்பட்ட திகதியினை தவிர ஏனைய அனைத்து தகவல்களையும் திருத்திமைக்க முடியும்.
- பிரதிக்கினைக்கு வழங்கப்படவேண்டிய முத்திரைக்கட்டணம் 5.00 ஆகும்.
- பிரதிக்கினையுடன் பிரதிக்கனை மூலம் செய்யப்படும் விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்கான எழுத்து மூல சாட்சியங்களை சமர்ப்பிக்குக
பொது வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்
- பிறப்பினை பதிவு செய்வதற்காக பிறப்பு நிகழ்ந்த பொது வைத்திய சாலையில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யும் பதிவாளருக்கு அறிவிக்கவும்.
- இறப்பினை பதிவு செய்வதற்காக தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.
- இறப்பு நிகழ்ந்த நேரத்தில் அங்கிருந்த நபர்
- இறப்பு நிகழ்ந்த நேரத்தில் பராமரித்த நபர்
- வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
- இறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.
- சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
- சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை
- இறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை
- இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் இறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
- தகவல் அளிப்பவருக்கு இலவசமாக இறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
கிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்
- இறப்பு பதியப்படுவது இறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். இறப்பு நிகழ்ந்தது கிராமிய வைத்திய சாலையிலாயின், அப்பிரதேசத்தில் உள்ள பதிவாளருக்கு இறப்பினை பதிவுசெய்வதற்கு அறிவிக்கவும்.
- இறப்பினை பதிவு செய்வதற்காக தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.
- இறப்பு நிகழ்ந்த நேரத்தில் அங்கிருந்த நபர்
- இறப்பு நிகழ்ந்த நேரத்தில் பராமரித்த நபர்
- வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
- இறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.
- சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
- சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை.
- இறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.
- இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் இறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
- தகவல் அளிப்பவருக்கு இலவசமாக இறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
- மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்
வௌிநாடொன்றில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்
- மரணம் நிகழ்ந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு/உயர் ஸ்தானிகருக்கு அறிவித்தல்.
- மரணத்தை அறிவிக்க வேண்டிய நபர்கள்,
- இறந்த நபரின் உறவினர்கள்
- மரணத்தின்போது சமூகமளித்திருந்த நபர்
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- இறந்த நபரின் கடவுச்சீட்டின் ஒரு பிரதி
- அந்த நாட்டில் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்
- இலங்கையில் தகனம்செய்வதாக இருந்தால் போக்குவரத்து செலவுகள்
- வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்பட்ட கடிதம் (இலங்கையில் தகனம் செய்வதாக இருந்தால்)
- இலங்கை தூதரால்/உயர் ஸ்தானிகரால் மரணம் பதிவுசெய்யப்படுகிறது. அத்துடன் அந்த நாட்டின் இலங்கை தூதரகத்தினால்/உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் பரிந்துரைக்கப்படுகின்ற கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
- இலங்கை தூதரால்/உயர் ஸ்தானிகரால் தகவல் அளித்தவருக்கு இலவசமாக இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்
காலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்
- இறப்பு நிகழ்ந்து மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்படா விடில் அவ்வாறான இறப்பினை பதிவு செய்துக் கொள்ள முடியும்.
- அப்பிரதிக்கினை செய்யப்பட்டிருக்குமாயின் அதில் குறிப்பிடப்பட்ட இறப்பு நிகழ்ந்து 25 வருடத்திற்கு மேற்படாத காலங்களுக்குள்ளாயின் மட்டும் இறப்பு பதிவு செய்யப்பட முடியும்.
- பிரதிக்கினையினை இறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
- பிரதிக்கினையினை சமர்ப்பிக்க கூடிய நபர்,
- இறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த அல்லது இறந்த நபர் இறுதியாக நோய்வாய்ப்பட்டிருந்த போது அவரை பராமரித்த நெருங்கிய உறவினர்.
- ஆர்வம் உள்ள வேறு நபர்
- பிரதிக்கினையில் ஒட்டப்படவேண்டிய முத்திரை,
- இறப்பு நிகழ்ந்து 12 மாதங்களுக்கு உள்ளாயின் - ரூபா 1.00
- இறப்பு நிகழ்ந்து 12 மாதங்களுக்கு மேலாயின் - ரூபா 5.00
அனுமான வயதுச்சான்றிதழ் வழங்கல்
- பிறப்பினை பதிவுசெய்ய முடியாத வயது 14ஐ விட குறைந்த பிள்ளைகள் சம்பந்தமாக அனுமான வயதுச் சான்றிதழ் வழங்கப்படும்.
- அனுமான வயதுச்சான்றிதழ் வழங்கப்படுவது,
- அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள்
- அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் அல்லாத வேறு தனியாரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள்
- அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் பிரதிக்கினையுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்
- பிள்ளை காப்பகத்தின் நிருவாகியின் சத்தியக்கூற்று
- அரசின் வைத்திய அலுவலர் மூலம் பிள்ளையின் வயதினை அனுமானித்து வழங்கப்பட்ட வைத்திய சான்றிதழ்
- பிள்ளை சம்பந்தமான விபரத்தினை உள்ளடக்கிய வேறு ஆவணங்கள் (இருந்தால் மட்டும்)
- அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் அல்லாத வேறு தனியாரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள் பிரதிக்கினையுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்
- பாதுகாவலரின் சத்தியக்கூற்று
- பிள்ளை பாதுகாவலரின் பாதுகாப்பில் உள்ளார் என உறுதிப்படுத்தக்கூடிய
- கிராம அலுவலரின் சான்றிதழ் அல்லது
- சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு அலுவலரின் சான்றிதழ் அல்லது
- சமூக சேவைகள் திணைக்களத்தின் சான்றிதழ் அல்லது
- பொலிஸ் பரிசோதகரினால் வழங்கப்பட்ட சான்றிதழ்
- அரசின் வைத்திய அதிகாரியினால் பிள்ளையின் வயதினை அனுமானித்து வழங்கப்பட்ட வைத்திய சான்றிதழ்
- சுகாதார வளர்ச்சி குறிப்பின் பதிவேடு
- பிள்ளை பாடசாலை செல்லுமாயின் பாடசாலையில் அனுமதித்த பதிவேட்டின் பிரதி
- மேலதிக விபரங்கள் தேவைப்படின் அருகில் உள்ள பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரை சந்திக்கவும்
தேசிய அடையாள அட்டை
பதிவு செய்யப்படுவதற்கு உட்படுகின்ற நபர்கள்.
கீழே 1 முதல் 6 வரையான சட்டப் பிரிவுகளில் விபரிக்கப்படும் நபர்கள் பதிவு செய்யப்படுவதற்கு உட்படமாட்டார்கள் என்பதோடு, அதற்கான உரிமையும் இல்லை.
- 1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்ட செல்லுபடியான வீசா அல்லது .................
- குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவின் கீழ் இடப்பட்ட கட்டளை/ கட்டளைகளுக்கு அமைவாக அச்சட்டத்தின் III ஆம் பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக விடுவிக்கப்பட்ட நபர்.
- 1967 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இந்து – இலங்கை ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட செல்லுபடியான வதிவதற்கான அனுமதிப்பத்திரத்தினைக் கொண்ட நபர்.
- குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் ஏற்பாடுகளை மீறி 1971.04.05 ஆம் திகதியிற்கு முன்னர் அல்லது அத்தினம் அல்லது அதன் பின்னர் இலங்கைக்கு வருகைதந்துள்ள அல்லது வருகைதரும் நபர்கள்.
- குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் ஏற்பாடுகளை மீறி 1971.04.05 ஆம் திகதி அல்லது அதன் பின்னர் இலங்கையில் தங்கியிருக்கும் நபர்கள்.
- 1967 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இந்து – இலங்கை ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அனுப்புவதற்கு நியமிக்கப்பட்ட நபர்கள்.
இவ்வாறான நிலைக்கு உட்படாத 1971.04.05 ஆம் திகதி அல்லது அதன் பின்னர் இலங்கையில் வசிக்கும் அல்லது இலங்கைக்கு வருகை தரும் மற்றும் 15 வயது பூர்த்தியடைந்த அல்லது பூர்த்தியடையும் அனைத்து நபர்களும் பதிவு செய்யப்படுவதற்கு உட்படுவார்கள்.
பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கக்கூடிய உச்ச பட்ச காலப்பகுதி மற்றும் பொருத்தமான வயதெல்லை.
- 1971.04.05 ஆம் திகதியன்றோ அல்லது அதன் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த அல்லது சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படக் கூடிய நபர்களினால், அவர்கள் இலங்கைக்கு வருகை தந்து 6 மாத காலத்தினுள்.
- சட்டத்தின் 2 (2) பிரிவின்படி பதிவு செய்யப்படுவதற்கு உற்படாத நபர், அதன் பின்னர் அந்நபர் பதிவு செய்தலுக்கு உட்பட்ட நாளிலிருந்து 6 மாத காலப்பகுதியினுள்.
- 1981 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதியின் பின்னர் 15 வயதினைப் பூர்த்தி செய்தவர்கள், சட்டத்தின்கீழ் பதிவு செய்வதற்கு உரித்துடையவர்கள், அனைத்து நபர்களும் தாம் 15 வயதினைப் பூர்த்தி செய்த தினத்திலிருந்து ஒரு வருட காலப்பகுதிக்குள்.
பதிவு செய்து முதல் தடவை அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்க வேண்டிய ஆவணங்கள்
ஆ.ப.தி/வி/1,7,8 மாதிரிப்படிவத்துடன் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரினால் உறுதிப்படுத்தப்பட்ட கீழ் குறிப்பிடப்படுகின்ற ஆவணங்களின் போட்டோ பிரதி. (முன்வைக்கப்பட்டுள்ள பிரதிகளினூடாக விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் பிறந்த திகதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்)
- பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதி
அல்லது
- உத்தேச வயதுச் சான்றிதழுடன் பிறந்த திகதியை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணம் (பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்/ பாடசாலை விடுகைப் பத்திரம்/ தோட்டவிடுகைப் பத்திரம்/ உறுதிப்படுத்தப்பட்ட ஜாதகப் பிரதி/ திருமணப் பதிவுச் சான்றிதழ்/ பிரஜா உரிமைச் சான்றிதழ்/ சத்தியக் கடதாசியின் மூலப் பிரதி)
- பிரஜா உரிமைச் சான்றிதழ் (தொடர்பு படுத்துங்கள்)
40 வயதிற்கு மேலான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது உத்தேச வயதுச் சான்றிதழ் இல்லாத விண்ணப்பதாரர் தமது பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்காக கீழ்வரும் ஆவணங்களை முன்வைக்கவும்
- மேலதிக மாவட்டப் பதிவாளரால் விநியோகிக்கப்பட்ட தேடுதல் விளைவுப் பத்திரம்.
- பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஏற்றுக் கொள்ளக்கூடிய எழுத்து மூல சாட்சி (பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்/ பாடசாலை விடுகைப் பத்திரம்/ தோட்டவிடுகைப் பத்திரம்/ உறுதிப்படுத்தப்பட்ட ஜாதகப் பிரதி/ திருமணப் பதிவுச் சான்றிதழ்/ பிரஜா உரிமைச் சான்றிதழ்/ வயோதிபர் அடையாள அட்டை)
- பெயர், பிறந்த திகதி மற்றும் பிறந்த இடத்தினை உறுதிப்படுதுவதற்காக சத்தியக் கடதாசியின் மூலப் பிரதி. (மாதிரியினைத் தொடர்பு படுத்துங்கள்)
பதவியை உறுதி செய்வதற்காக முன்வைக்க வேண்டிய ஆவணங்கள்
- அரச பிரிவு – 6 மாத காலத்தினுள் பெற்றுக் கொள்ளப்பட்ட சேவைச் சான்றிதழின் மூலப் பிரதி
- தனியார் பிரிவு - 6 மாத காலத்தினுள் பெற்றுக் கொள்ளப்பட்ட சேவைச் சான்றிதழின் மூலப் பிரதி.
- வைத்தியர், பொறியியலாளர், வழக்கறிஞர், பட்டயக் கணக்காளர் மற்றும் கட்டடக்கலைஞர் போன்ற பதவிப் பெயர்களை உள்ளடக்குவதற்காக பட்டச் சான்றிதழ் மற்றும் தொழில் தகைமைச் சான்றிதழ் முன்வைக்க வேண்டும்.
- ஓய்வூதியர் என்பதை உள்ளடக்குவதற்காக ஓய்வூதியக் கடிதம்/ ஓய்வூதிய அட்டை முன்வைக்கப்பட வேண்டும்.
அடையாள அட்டை விநியோகிப்பதற்குத் அவசியமான ஏனைய ஆவணங்கள்
- பௌத்த துறவி ஆயின் பௌத்த மத அலுவல்கள் அமைச்சினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சாமனேரு/ உபசம்பதா சான்றிதழ்.
- ஏனைய மதகுருமார்களுக்காக உரிய திணைக்களம் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழ்.
- துறவு வாழ்க்கையிலிருந்து மீண்ட பின்னர் அது தொடர்பில் பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் சான்றிதழ்
- வாழ்க்கைத் துணையின் பெயரைப் பெற்றுக் கொள்வதற்காக - திருமணப் பதிவுச் சான்றிதழ்
- இலங்கை தாய் அல்லது தந்தைக்கு வெளிநாட்டில் பிறந்த நபர் ஒருவர், குடிவரவு குயகல்வுத் திணைக்களத்தினூடாக இலங்கைப் பிரஜாவுரிமையினைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் வழங்கப்படும் பிரஜாவுரிமைச் சான்றிதழ். (தொடர்பு படுத்துங்கள்)
- இரட்டைப் பிரஜா உரிமை உள்ள நபர்களாயின் இரட்டைப் பிரஜா உரிமைச் சான்றிதழ்.
- 1 3/8 x 7/8 அங்குல அளவிலான 3 வர்ணப் புகைப்படங்கள் முன்வைக்கப்பட வேண்டும். (பின்னணி வர்ணம் – ஆகாய நீலம்/ Sky Blue)
விசேட அறிவித்தல்
|
- முத்திரைக் கட்டணம்: 3.00 ரூபா
- குறிக்கப்பட்ட உரிய கால எல்லைக்குள் (தொடர்புபடுத்துங்கள்) பதிவு செய்வதற்கு தவறுகின்ற விண்ணப்பதாரர்கள், கால தாமதத்திற்கான காரணங்களை குறிப்பிட்டு கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக அதனை உறுதிப்படுத்தி ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் ............................ (இலக்கம்) என்ற மாதிரி (தொடர்புபடுத்துங்கள்)
- விண்ணப்பப்படிவங்களை உறுதிப்படுத்தல்:
- கிராம உத்தியோகத்தர் (கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களில் பிரதேச செயலாளர் மேலொப்பமிடுவது கட்டாயமானது).
- பாடசாலை மாணவர்களாயின் பாடசாலை அதிபர்.
- தோட்ட வதிவாளர்களாயின் தோட்ட அதிகாரி.
- விசேட தேவைகள் மற்றும் காரணங்களின் போது ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் நாயகம் மூலம் அதிகாரம் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்.
அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைவாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை கையளித்தல்.
- சாதாரண சேவை:
- விண்ணப்பப்படிவத்தினை உறுதிப்படுத்திய உத்தியோகத்தருக்கு
- ஒரு நாள் சேவை:
- உரிய உத்தியோகத்தர் உறுதிப்படுத்திய பின்னர் ஆட்பதிவுத் திணைக்கள கொழும்பு பிரதான காரியாலயத்தில் ஒரு நாள் சேவைப் பிரிவிற்கு
கடவுச் சீட்டு
| கடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள் |
|
புதிய கடவுச்சீட்டு விண்ணப்ப அனுமதி நடைமுறை 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது டிஜிட்டல் புகைப்படத்தையும் விரலடையாளத்தையும் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும். டிஜிட்டல் பகைப்படமானது நாடு பூராகவும் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்களில் அமைந்துள்ள புகைப்பட நிலையங்களினூடாக சமாப்பிக்கப்படலாம். அச்சிடப்பட்ட புகைப்படப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விரலடையாளங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படுவதுடன் இதற்காக விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட ரீதியில் திணைக்களத்திற்கு சமூகமளித்தல் வேண்டும்.
முக்கிய விடயங்கள்
டிஜிட்டல் புகைப்படம் எவ்வாறு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படலாம்?
மேலதிக தகவல்கள்: துரித இலக்கம் 1962 அல்லது தொலைபேசி இலக்கங்கள் 0115329200 / 0115329175 இலங்கைச் கடவுச்சீட்டொன்றைப் பெற எனக்கு உரிமை உண்டா?
நீங்கள் பரம்பரை வழியாகவோ பதிவு மூலகமாகவோ இலங்கைப் பிரசையெனில் நீங்கள் இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். கடவுச்சீட்டொன்றினை அவசரமாகப் பெற்றுக்கொள்ளல் உங்களின் அவசரப் பயணங்களுக்கு கடவுச்சீட்டு அவசியமெனில் ஒரு நாள் சேவை ஊடாக அதற்காக விண்ணப்பிக்கலாம். குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் இருந்து மாத்திரமே இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். (கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளலின் கீழ் பார்க்கவும். கடவுச்சீட்டொன்றின் செல்லுபடியாகும் காலவரையறை தற்போது விநியோகிக்கப்படுகின்ற (N) பிரிவைச் சேர்ந்த கடவுச்சீட்டுகள் வேறுவிதமாகக் காட்டப்பட்டிராவிட்டால் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அவசர சான்றிதழ் இரண்டு வருடங்களுக்குச் செல்லுபடியாவதுடன் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதனை நீடித்துக்கொள்ளலாம். கடமை நேரங்கள் யாவை?
கொழும்பு 10, ஆனந்த ராஜகருணா மாவத்த, இலக்கம் 41 இல் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவுக்கு (01 வது மாடி) அனைத்து விதமான கடவுச்சீட்டு விண்ணப்ப் பத்திரங்களையும் ஒப்படைக்கலாம். இங்கு இடஅமைவுப் படத்தைப் பார்க்க ஏற்புடைய பொத்தானை அழுத்துக. கடவுச்சீட்டு வகைகள் யாவை?
|














